வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸ் என்பவரை நியமித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலாவின் நிர்வாகத் தொடர்ச்சிக்கும், விரிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை நேற்று (3) அமெரிக்க படை கைது செய்தது.
இதனையடுத்து, வெனிசுலா நாட்டின் துணை ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments