Ticker

10/recent/ticker-posts

ஈரான் மீதான கடற்படை முற்றுகைக்கு இஸ்ரேல் ஆதரவு.

 ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு இன்று (13) தெரிவித்துள்ளார்.

முன்னர், பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாமையால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நாட்டின் கடற்படையை முற்றுகையிடப் போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

இது குறித்து இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நெடன்யாகு பேசியதாக காணொளி ஒன்றை அவருடைய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

“நாங்கள், நிச்சயமாக, ட்ரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கின்றோம். மேலும், இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன் ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்குமென்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அமெரிக்கா இந்த ஈரானின் கடற்படையை முற்றுகை செய்யவும் முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments